திருமணமான நபரோடு வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்? ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு

திருமணமான நபரோடு வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்? ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு
திருமணமான நபரோடு வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்? ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பட்டதாரி இளம் பெண்ணை கடத்தியதாக திருமணமான இளைஞரின் வீடு சூறையாடப்பட்டது.

சாயல்குடி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பா. இவரது மகன் கோட்டைச்சாமி. இவருக்கு தங்க முனியம்மாள் என்ற மனைவியும், கலையரசன்(8) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கோட்டைச்சாமிக்கும் அல்லிக்குளம் கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் மூகாம்பிகைக்கும்(20) காதல் ஏற்பட்ட தெரிகிறது. இதைத்தொடர்ந்து, மூகாம்பிகை கடந்த 14ம் தேதி கோட்டைச்சாமியுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பெண்ணின் பெற்றோர் கோட்டைச்சாமி பெண்ணை கடத்திச் சென்றதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

 அந்த புகாரின் பேரில் சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோட்டைச்சாமியின் வீட்டிற்குள் புகுந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு சூறையாடியதாக கூறப்படுகிறது. இதில் வீடு, கதவு, டிவி, ஜன்னல், பீரோ, பிரிட்ஜ், ஃபேன், கிரைண்டர், லைட் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

 இதுகுறித்து கோட்டைச்சாமியின் தந்தை முனியய்யா சாயல்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com