[X] Close

“கூட்டணி என்பது துண்டு போன்றது; கொள்கை என்பது வேட்டி போன்றது” - ராஜேந்திர பாலாஜி

தமிழ்நாடு

rajendra-balaji-said-about-sasikala-ana-bjp-alliance

கூட்டணி என்பது துண்டு போன்றது. கொள்கை என்பது வேட்டி போன்றது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் எதை செய்தாலும் ஸ்டாலின் எதிர்க்கிறார். வேளாண் திருத்த மசோதாவில் தவறு இருந்தால் கண்டிப்பாக முதல்வர் எதிர்ப்பார். எதை செய்தாலும் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்லி பிழைப்பு நடத்தும் ஸ்டாலின் கனவு பழிக்காது.

இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு. கூட்டணி வேறு; கொள்கை வேறு. கூட்டணியை விட்டு கொடுக்கலாம். கொள்ளையை விட்டு கொடுக்க முடியாது. கூட்டணி என்பது துண்டு போன்றது. கொள்கை என்பது வேட்டி போன்றது” எனத் தெரிவித்தார். மேலும், சசிகலா வந்தால் அரசியல் மாற்றம் நிகழுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “எது நடந்தாலும், எப்படி நடந்தாலும், எந்த சூழ்நிலையில் நடந்தாலும் முதல்வரும், துணை முதல்வரும் முடிவு எடுப்பார்கள். அவர்கள் எடுக்கும் முடிவிற்கு அதிமுக தொண்டர்கள் கட்டுப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டார்.


Advertisement

போட்டுக்கொடுக்கும் அதிகாரிகள்... அமைதியான ராஜேந்திர பாலாஜி... | the news  about minister Rajendra Balaji | nakkheeran

தொடர்ந்து பேசிய அமைச்சர், “நாங்கள் தேர்தலை சந்திக்க பயப்படவில்லை. தேர்தலை தைரியமாக சந்திப்போம். நாங்கள் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறுவோம். வெற்றி பெறுவோம். அதிமுக கடல் போல் பெரிய ஆளுமையான கட்சி. கடலில் கொந்தளிப்பு வரும். ஆனால் கடல் அப்படியே தான் இருக்கும். சில நேரங்களில் கடல் பொங்கும். ஆனால் மங்காது. அது போல் அதிமுக பொங்கும் கடல். அதிமுக எந்த காலமும் அழியாது. மீண்டும் அதிமுக ஆட்சிதான் வரும்” எனத் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close