[X] Close

'விருச்சககாந்’துக்கு நடிகர்கள் உதவி!

actor-saravanan-and-kandeepan-helps-to-comedian-viruchagakant

பாலாஜி சக்திவேல் இயக்கிய ’காதல்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ’விருச்சக காந்த்’. இவர், கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் கோயில் ஒன்றில் இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதையடுத்து அவரை சந்தித்த நடிகர் சரவணன், தயாரிப்பாளர் காண்டீபனுடன் இணைந்து, அவர் கேட்டபடி, புதிய சாம்சங் மொபைல்போனும். ஒரு செட் உடைகளும் வாங்கிக்கொடுத்தார். இந்நிலையில் நேற்று நடந்த 'உறுதிகொள்' பாடல் வெளியீட்டு விழாவிலும் அவருக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
பின்னர், அபி சரவணன் நடிக்கும் ’சூறாவளி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை அந்தப் படத்தின் இயக்குனர் குமார் நந்தா அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். நடிகர் மன்சூர் அலிகானும் தனது படத்தில் வாய்ப்பு வழங்குவதாகச் சொன்னார்.


Advertisement

Advertisement
[X] Close