Published : 21,Sep 2020 02:00 PM
தூத்துக்குடி: இளைஞர் செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு

தூத்துக்குடி சொக்கன்குடியிருப்பில் இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த 32 வயது செல்வன் என்பவர் சொத்து பிரச்னையில் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இதனால், ஹரிகிருஷ்ணன் மீதும் கொலை செய்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள அவர் இன்னும் கைது செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்
முன்னதாக இளைஞர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட இருவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தற்போது அவர்கள் 3 பேரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது