Published : 21,Sep 2020 10:57 AM

13 சீசன்.. 12 கேப்டன்கள்.. எப்படி மாற்றினாலும் சோபிக்காத பஞ்சாப்..!

Kings-XI-Punjab--team-with-most-captains-in-IPL-history

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 13 சீசன்களில் 12 கேப்டன்களை நியமித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி சூப்பர் ஓவர் வரை சென்று த்ரில் வெற்றி பெற்றது. இதனால் இந்தாண்டும் பஞ்சாப் அணி தோல்வியுடன் ஐபிஎல் தொடரை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கேப்டன்களை மாற்றினாலும் பஞ்சாப் அணியால் இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. கடந்த ஐபிஎல்லில் அஸ்வினை கேப்டனாக நியமித்த அந்த அணி இந்தாண்டு இளம் வீரர் கே.எல்.ராகுலை கேப்டனாக நியமித்தது.

image

2008 ஐபிஎல் முதல் சீசனில் கேப்டனாக இருந்தது யுவராஜ் சிங். அவர் தலைமையிலான பஞ்சாப் அணி அப்போது புள்ளிகள் பட்டியலில் 2 ஆம் இடத்தை பிடித்தது. அதுதான் பஞ்சாப் அணியின் அதிகபட்ச சாதனையாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணிக்கு அதிகப் போட்டிகளில் கேப்டனாக இருந்த பெருமை ஆடம் கில்கிறிஸ்டையே சேரும். அவர் மொத்தம் 34 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டார். அதன் பின்பு அஸ்வின் 2018, 2019 இல் கேப்டனாக இருந்தார். ஆனால் பஞ்சாப் பெரியளவில் சோபிக்கவில்லை.

image

இதுவரை 13 சீசன் ஐபிஎல்லில் 12 முறை கேப்டன்களை மாற்றியுள்ளது பஞ்சாப் அணி. அதன் விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்:

1. ஆடம் கில்கிறிஸ்ட் - 34 போட்டிகள் - 17 வெற்றிகள்
2. ஜார்ஜ் பெய்லி - 16 போட்டிகள் - 14 வெற்றிகள்
3. யுவராஜ் சிங் - 29 போட்டிகள் - 17 வெற்றிகள்
4. ரவிச்சந்திரன் அஸ்வின் - 28 போட்டிகள் - 12 வெற்றிகள்
5. கிளன் மேக்ஸ்வெல் - 14 போட்டிகள் - 7 வெற்றிகள்
6. குமார் சங்கக்காரா - 13 போட்டிகள் 3 வெற்றிகள்
7. டேவிட் ஹசி - 12 போட்டிகள் 6 வெற்றிகள்
8. முரளி விஜய் - 8 போட்டிகள் 3 வெற்றிகள்
9. டேவிட் மில்லர் - 6 போட்டிகள் 1 வெற்றி
10. மகேலா ஜெயவர்தனே - 1 போட்டி 1 தோல்வி
11. விரேந்திர சேவாக் - ஒரு போட்டி, 1 வெற்றி
12. கே.எல்.ராகுல் (நடப்பு கேப்டன்)

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்