Published : 21,Sep 2020 08:50 AM
ஆறு நாய்களுடன் ஹாயாக ஸ்கூட்டியில் செல்லும் இளைஞர்: வைரல் வீடியோ

இளைஞர் ஒருவர் ஆறு நாய்களுடன் ஸ்கூட்டியில் ஹாயாக செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Where do you see yourself in 10 years?
— The Sun (@TheSun) September 21, 2020
Me:
? : @doyoutravelpic.twitter.com/GuitaSR14k
ஒரு ஸ்கூட்டியில் அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு நாய்களை வைத்து ஓட்டலாம். ஏனென்றால், நாய்களுக்கு மனிதர்கள்போல் பைக்கை கெட்டியாக பிடித்துக்கொள்ளத் தெரியாது. ஆனால், இளைஞர் ஒருவர் தனது ஸ்கூட்டியில் ஆறு நாய்களை ஒரே சமயத்தில் ஹாயாக அழைத்துச் செல்கிறார். அந்த வீடியோவில் ஸ்கூட்டியின் பின்பறம் நாய்கள் வசதியாக அமர கம்பி கூடைப்போல் ஒன்றை அமைத்து சிறு சிறு ப்ளாஸ்டிக் ட்ரம்களை கட்டி, அதன்மேல் நாயை அமர வைத்துச் செல்கிறார்.
அதோடு ஒரு பெரிய நாயை ஸ்கூட்டியின் முன்புறம் வைத்துக்கொண்டுள்ளார். ஒவ்வொரு ட்ரம்கள் மேலும் நாய்கள் கீழே விழாமல்; தாவாமல் பைக்கில் அமர்ந்து செல்வது கொள்ளை அழகாக இருக்கிறது. பார்ப்பவர்களை ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்கலாமே... சிறுமிபந்துடன்விளையாடுவதைஆச்சர்யத்தோடுபார்க்கும்பூனைகள்: வைரல்வீடியோ