கர்ப்பிணிகள் நெய் சேர்த்துக் கொள்ளலாமா ?

கர்ப்பிணிகள் நெய் சேர்த்துக் கொள்ளலாமா ?
கர்ப்பிணிகள் நெய் சேர்த்துக் கொள்ளலாமா ?

சாதாரண உணவை அதீத ருசியாக்கும் மகத்துவம் நெய்க்கு உண்டு. கெட்டியாகக் கடைந்தெடுத்தப் பருப்புக் குழம்பை சுடு சாதத்தில் ஊற்றி, அதன்மேல் நெய்யை ஊற்றி பிசைந்து சாப்பிட... அடடா! அந்த டேஸ்ட் யாருக்குத்தான் பிடிக்காது? நெய் என்றாலே கொழுப்பு, எடைகூடி விடும் என பலர் தவிர்த்தும்விடுகிறார்கள். எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் கெடுதல்தான்.

எண்ணெய்க்கு பதிலாக அளவோடு நெய்யை சேர்த்துக்கொள்ளலாம். இதை குணமாக்கும் எண்ணெய் என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. உடல் எடை கூடும் காலம் என்பதால், கர்ப்பிணி பெண்கள் நெய்யை சாப்பிடலாமா என சிலருக்கு சந்தேகம் எழும். குறிப்பிட்ட அளவு நெய்யை சேர்த்துக்கொண்டால் அதிக பலனைப் பெறலாம்.

  • நல்ல கொழுப்பு என சொல்லப்படுகிற நெய்யை கர்ப்பிணிப் பெண்கள் தினமும் உணவில் சேர்த்துவர, கருவில் இருக்கும் குழந்தைக்கு ஊட்டமளிக்கும்.
  • தாய்க்கு தினமும் தேவையான உற்சாகத்தைத் தரும். உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, சேதமடைந்த செல்களை குணமாக்கும்.
  • உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சாதாரணப் பெண்களைவிட கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் 200-300 கலோரிகள் அதிகமாகத் தேவைப்படும். இந்த அதிகக் கலோரிகளை நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதன்மூலம் எளிதாகப் பெறலாம்.
  • நெய் அதிகம் சேர்த்து செய்த லட்டுகளை கர்ப்ப காலத்தில் அதிகம் சாப்பிட பெண்கள் ஆசைப்படுவார்களாம். இது அவர்களுக்கு பசியைத் தூண்டுகிறது.
  • பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், தான் கர்ப்பமாக இருந்தபோது தினமும் பருப்பு மற்றும் பராத்தாவுடன் நெய்யை சேர்த்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
  • குழந்தைப் பிறப்பதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்பு நெய்யை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அதிக பலனைத் தரும். அதாவது அதிகபட்சமாக 1-3 டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம்.
  • உடல்நிலையைப் பற்றி தெரிந்துகொள்ள மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று, சேர்த்துக்கொள்வது சிறந்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com