16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை.!

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை.!
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை.!

16 வயது சிறுமியை வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பெற்றோர் இல்லாததால் அதே பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து (பெரியப்பா முறை) என்பவர் அந்த சிறுமியை வளர்த்து வந்தார். அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், சிறுமி 3 மாதம் கர்ப்பமாகியுள்ளார். அதனை கலைக்க சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவர்கள் சிறுபாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், “சிறுமி அவருடைய தோழியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவருடைய தோழியின் சகோதரர் வெற்றிவேல் (29) என்பவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வளர்ப்பு தந்தை பிச்சமுத்துவிற்கு தெரியவந்துள்ளது. அதனைப் பயன்படுத்தி அந்த சிறுமியை மிரட்டி பிச்சைமுத்துவும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்” என்பது தெரியவந்தது.

சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் இருவரையும் பிடித்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com