[X] Close

ஐபிஎல் 2020 : டெல்லி  VS பஞ்சாப் : சொதப்பிய டெல்லியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் 

விளையாட்டு,ஐபிஎல் திருவிழா

IPL-2020-DC-VS-KXIP-DELHI-BATSMAN-STRUGGLES-TO-SCORE-RUNS

நடப்பு சீசனுக்கான இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியோடு விளையாடி வருகிறது. 


Advertisement

image

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. 


Advertisement

டெல்லி அணிக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக தவானும், பிருத்வி ஷாவும் களம் இறங்கினர். 

முதல் பந்திலிருந்தே பவுண்டரி அடிக்க  முயன்றவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

முதல் ஓவரை காட்ரெல் வீசினார். இரண்டாவது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் தவான் - ஷாவுக்கு இடையே ஏற்பட்ட மிஸ் கம்யூனிகேஷனால் ரன் அவுட்டானார் தவான். 


Advertisement

தொடர்ந்து ஷமி வீசிய மூன்றாவது ஓவரில் பிருத்வி ஷா (5 ரன்கள்) மற்றும் ஹெட்மயர் (7 ரன்கள்) அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இந்த தொடரின் சிறந்த பேட்டிங் லைன் அப் கொண்ட அணியாக டெல்லி பார்க்கப்பட்டது. முதல்  ஆட்டத்திலியேயே பேட்டிங்கில் டெல்லி சொதப்பி விட்டது.

ஐந்து ஓவர் முடிவில்  21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறி வருகிறது. 


Advertisement

Advertisement
[X] Close