4 நாட்கள் பேட்டரி தாங்கும் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்

4 நாட்கள் பேட்டரி தாங்கும் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்
4 நாட்கள் பேட்டரி தாங்கும் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்

ஜப்பான் நிறுவனமான ஷார்ப் தனது 2 வது ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 

ஜப்பான் நிறுவனமான ஷார்ப் நிறுவனத்தின் இந்த புதிய ஷார்ப் x1 ஸ்மார்ட்ஃபோன் மற்ற ஃபோன்களை விட விலை சற்று அதிகமாகவே உள்ளது. இதன் அன்லாக்டு வெர்சன் 40,500 ரூபாய் ஆகும். இதற்கு உறுதியாக 18 மாத அப்டேட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்: 5.3 இன்ச் ஃபுல் எச்டி IGZO LCD தொடுதிரை, குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 Soc, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட், 16.4 எம்பி மெகாபிக்சல் ரியர் கேமரா, எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, 3900 mAh பேட்டரி திறனுடைய இந்த ஃபோன் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 4 நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஃபோன்கள் மின்ட் க்ரீன், டார்க் பர்பிள், வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com