திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாற்று மதத்தினர் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போடாமல் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வேற்று மதத்தவர்கள் வரும்போது உண்மையான பக்தியுடன் தரிசனத்திற்கு செல்வதாக உறுதி கூறும் மத உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே உள்ளே செல்ல முடியும் சந்திரபாபு முதல்வராக இருந்தபோது, இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலும் அவர் கையெழுத்திட்ட பின்பே தரிசனத்திற்கு சென்றார் என சொல்லப்படுகிறது. தற்போது இந்த முறையை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏழுமலையான் மீது உண்மையான பக்தி கொண்ட வேற்று மதத்தவர்கள் மட்டுமே தரிசனத்திற்காக வரும் நிலையில் அவர்களிடம் மத உறுதி பத்திரத்தில் கையெழுத்து பெறுவது தேவையில்லாதது. அது அவர்களின் பக்தியை குறை கூறுவதாக அமைகிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து மத உறுதி பத்திர முறையை ரத்து செய்யும் வகையில் தேவஸ்தானம் வழிவகையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Loading More post
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்