சிறுமி பந்துடன் விளையாடுவதை ஆச்சர்யத்தோடு பார்க்கும் பூனைகள்: வைரல் வீடியோ

சிறுமி பந்துடன் விளையாடுவதை ஆச்சர்யத்தோடு பார்க்கும் பூனைகள்: வைரல் வீடியோ
சிறுமி பந்துடன் விளையாடுவதை ஆச்சர்யத்தோடு பார்க்கும் பூனைகள்: வைரல் வீடியோ

சிறுமி  பந்தை தூக்கிப்போட்டு விளையாடும் வீடியோவை மூன்று பூனைகள் அதிசயத்தோடு பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பந்து என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.  பெரியவர்களையும் குழந்தையாக்கிவிடும். அழுகின்ற குழந்தைகளைக்கூட குதூகலமாக்கிவிடும். எத்தனை வயதானவர்களாக இருந்தாலும் கையில் பந்து இருந்தால் ஒருமுறையாவது தூக்கிப்போட்டு விளையாடாமல் விடமாட்டார்கள்.

அழுந்துகொண்டிருக்கும் குழந்தைகள்கூட பந்தைக்கண்டால் பிஞ்சுக் கைகளால் கவ்விபிடித்துக்கொண்டு விளையாடும். யாராவது பிடுங்கிவிட்டால், கோபத்தால் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்.  பந்துமீது அப்படியொரு ‘பந்தம்’ எல்லோருக்கும் உண்டு.. அப்படியொரு ஈர்ப்பு பந்துக்கு உண்டு.

உடற்பயிற்சிகள் செய்வதில்கூட பந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த பந்தாலேயே கிரிக்கெட், வாலிபால், புட்பால், கோல்ஃப், ஹாக்கி, பேட்மிண்டன் என்று உலகின் முக்கியமான விளையாட்டுக்கள் உள்ளன.

மனிதர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாததாகியுள்ள பந்தை யாருக்குதான் பிடிக்காது என்பதை நிரூபிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, பூனைகள் பார்க்கும் வீடியோ.

 அந்த வீடியோவில், ஒரு சிறுமி பந்தை எதிர்தரப்பில் தூக்கிப்போடுகிறார். அங்கிருந்து வரும் பந்தை மீண்டும் பிடிக்கிறார். இந்த காட்சிகளை அருகிலுள்ள வீட்டின் ஜன்னலில் இருந்து மூன்று பூனைகள் பந்து பறந்து;பாய்ந்து வருவதையும் எதிர்தரப்பிற்கு செல்வதையும்  தலையை திருப்பித் திருப்பி ஆச்சர்யத்துடன் பார்க்கின்றன.

பந்துமேலே செல்லும்போது தலையை தூக்கிப் பார்க்கின்றன. பூனைகள் சிறுமி விளையாடும் வீடியோவை பார்ப்பது கண்களை மட்டுமல்ல மனதையும் புத்துணர்ச்சியாக்குகிறது.

இந்தக் கொரோனா சூழலில் உலகமே மனரீதியாக பாதிப்படைந்துள்ள நிலையில், பூனைகளின் இந்த க்யூட் வீடியோ புதுத்தெம்பையும் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. இதுவரை இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com