அந்தாதூன் தெலுங்கு ரீமேக்கில் தபு வேடத்தில் தமன்னா நடிக்கவிருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன
கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது ’அந்தாதூன்’ திரைப்படம். 40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 450 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில், ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு சிறந்த நடிப்பிற்கான ஆயூஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது, சிறந்த படம், சிறந்த தழுவல் படம் ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை அந்தாதூன் குவித்தது.
இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் மோகன் ராஜா இயக்க நடிகர் பிரஷாந்த் நடிக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனங்கள் எழுதியும் முடித்துவிட்டார். கொரோனா சூழலால் படத்தின் படபிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தெலுங்கில் அந்தாதூன் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், ஆயூஷ்மான் குரானா பாத்திரத்தில் நிதினும், தபு வேடத்தில் தமன்னாவும், ராதிகா ஆப்தேவாக நபா நடேஷும் நடிக்கிறார்கள். இப்படத்தை மெர்லபகா காந்தி இயக்குகிறார்.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!