தொடரும் அவலம்: ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

தொடரும் அவலம்: ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
தொடரும் அவலம்: ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 14 வயது சிறுமி அதன் நிறுவனர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் கூறியுள்ளார்.

ஹைதரபாத்தில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் ஜதா மாதவ். இந்நிலையில் இங்கு தங்கியிருக்கும் மாணவி ஒருவர் தனது ஆசிரியரிடம் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில் நிறுவனர் ஜதா மாதவ் தன்னை அவர் அறைக்கு அழைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் தன்னை போன்ற சக மாணவிகளிடமும் ஜதா மாதவ் இவ்வாறு தகாத மாறி நடப்பதாக அந்த மாணவி தெரிவித்தார்.

இதுகுறித்து ஆசிரியர் அளித்துள்ள தகவலின்படி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை அரசாங்க விடுதிக்கு மாற்றியுள்ளனர். மேலும் ஜதா மாதவையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோன்று கடந்த வாரம் கூட மற்றொரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்த மாணவி, அந்த இல்லத்தை வழிநடத்தி வந்தவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com