[X] Close

பிக்பாஸ் போட்டியாளர்கள் ‘டபுள் பெட்’ பயன்படுத்த தடை?

இந்தியா

---Bigg-Boss-14----Update--No-Double-Beds-or-Bed-Sharing-For-Contestants

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ‘டபுள் பெட்’ பயன்படுத்த திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது


Advertisement

சல்மான் கானின் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் 14’ தொடருக்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் ‘பிக் பாஸ்’ தொடரில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு டபுள் பெட் கொண்ட கட்டில் கிடையாது என்றும் ஒரு பெட்டில் இருவர் தூங்கக்கூடாது என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தட்டு, கண்ணாடி போன்ற பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement

image

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியாளர்களுக்கு வாரமொரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

மோனலிசா, சித்தார்த் சுக்லா, மற்றும் ஹினா கான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பிக் பாஸ்’ தொடரில் பங்கேற்கிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close