[X] Close

பயங்கரவாதத்துக்கு பகிரங்கமாக நிதி திரட்டிய அமைப்பு!

Pakistan-Jihadi-groups-collect-funds-for-Jihad-in-Kashmir

ஃபலா-இ-இன்சானியாத் என்ற பயங்கரவாத அமைப்பினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக, நிதி திரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஃபலா-இ-இன்சானியாத் என்ற அமைப்பு சார்பாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான ராவலாகோட் என்ற இடத்தில், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பகிரங்கமாக நிதி திரட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீத்தை, தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்துள்ளது. மேலும், ஹஃபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு எதிராக, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close