[X] Close

செய்தி செயலியில் இணைந்தால் வருமானம் என ஆசைவார்த்தை கூறி ரூ. 350கோடி மோசடி.!

தமிழ்நாடு

If-you-join-the-news-processor--you-will-get-Rs--350-crore-fraud

செய்தி செயலி மூலம் வருமானம் எனக்கூறி 350 கோடி ரூபாய் வரை மக்களின் பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

image


Advertisement


ஏடிசி (APEX DIGITAL CHANNEL) என்ற செயலி மூலம் 300 ரூபாயில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி செயலியில் பதிவு செய்து கொண்டு, தினமும் பதிவேற்றம் செய்யப்படும் செய்திகளை பார்த்து முடிந்ததும் DONE என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் நாம் செலுத்தியுள்ள முதலீட்டு தொகைக்கு ஏற்றார் போல் தினமும் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் ஏறிவிடும் எனக்கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களை இத்திட்டத்தில் இணைத்துள்ளனர்.

 

image


மக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல், தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் என அனைவரையும் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் இதில் இணைத்துள்ளனர். இணைந்து சில நாட்களுக்கு உரிய பணம் வந்த நிலையில், கடந்த ஜனவரி 5ஆம் தேதி முதல் இந்த செயலி செயல்படாமல் போனது. இதுகுறித்து இதன் பயனாளர்கள் முறையிட்ட போது இந்நிறுவனத்தினர் உரிய பதில் கொடுக்கவில்லை. மேலும் இதன் உரிமையாளர் சுரேஷ் பாண்டியன் தலைமறைவாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

 

 

image


பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தங்களுக்கு இது உதவும் என நம்பி இத்திட்டத்தில் தாங்கள் சேர்ந்ததோடு தங்களுடைய உறவினர்கள் நண்பர்கள் என அனைவரையும் சேர்த்துவிட்டு ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் முதலீடு செய்துள்ள நிலையில் பணத்தை மோசடி செய்துள்ள நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.


350 கோடி ரூபாய் வரை தமிழக மக்களின் பணத்தை ஏமாற்றிய, ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏடிசி (APEX DIGITAL CHANNEL) நிறுவனத்தை கண்டித்தும், நிறுவனர் சுரேஷ் பாண்டியாவையும், மோசடிக்கு காரணமாக இருந்த நாகர்கோவிலை சேர்ந்த முகமது ரபிக் மற்றும் திருவண்ணாமலை ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும், மக்கள் பணத்தை திரும்ப பெற்றுத் தர கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

image


அப்போது இவர்களை இச்செயலில் இணைய வைத்த பெண் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்ததால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close