நடிகர் மாதவன், அனுஷ்கா நடித்துள்ள ’நிசப்தம்’ த்ரில்லர் படம் ஓ.டி.டியில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் நடிகர் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலின் பாண்டே உள்ளிடோர் நடித்த ’நிசப்தம்’ திரைப்படம் வெவ்வேறு தலைப்புகளில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தியில் வெளியாகவிருக்கிறது.
தமிழில் நிசப்தம் என்ற பெயரிலேயே வெளியிடப்படுகிறது. ஒட்டுமொத்தப் படபிடிப்பும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 2 ஆம் தேதி திரைக்கு தயாராக இருந்தபோது கொரோனா ஊரடங்கால் படம் வெளியாவதில் சிக்கல் உண்டானது.
Your silence will protect you.#NishabdhamOnPrime, premieres October 2 in Telugu and Tamil, with dub in Malayalam!#AnushkaShetty @ActorMadhavan @yoursanjali @actorsubbaraju #ShaliniPandey @hemantmadhukar #TGVishwaPrasad @konavenkat99 @vivekkuchibotla pic.twitter.com/pgV6fiHSvC — amazon prime video IN (@PrimeVideoIN) September 18, 2020
இதனால், ஓடிடி தளத்தில் வெளியிட முற்பட்டபோது நடிகை அனுஷ்கா இப்படத்தின் புரொமொஷனுக்கு வரமறுத்தார். தற்போது தயாரிப்பாளருடன் சமாதானம் ஆகிவிட்டதால், அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அமேசான் பிரைம் அறிவித்திருக்கிறது.
சஸ்பென்ஸ், த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் வசனமே இல்லை என்றும் கூறப்படுவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஏற்கனவே, மாதவன் அனுஷ்கா ஜோடி சுந்தர் சி இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான ’ரெண்டு’ படத்தில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, 14 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் ’நிசப்தம்’ படத்தில் இணைந்துள்ளனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்