Published : 18,Sep 2020 03:50 PM

''பாசத்தை ஊட்டுகிறது’’ - ரஜினி ஆடியோவுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ்!

Actor-Raghava-Lawrence-praises-Rajini-Audio

மருத்துவமனையில் இருக்கும் ரசிகருக்கு ஆடியோ வெளியிட்ட ரஜினிக்கு பெருமையோடு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

 

ரஜினி ரசிகர் முரளி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு சிறுநீரகப் பிரச்சனையும் ஏற்பட்டதால் இனி பிழைக்கமாட்டோம் என்று நினைத்தவர், “தலைவா எனது இறுதி ஆசை 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் ஆன்மீக குருவாகவும் வீரநடைப்போட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் ரூபாய் என்ற நிலையை உருவாக்கிக்கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்தான் எனக்கு உள்ளது” என்று கூறியிருந்தார்.

image

அவருக்கு நடிகர் ரஜினியும் ’உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்க. நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். நலம்பெற்று குடும்பத்தினரோடு என் வீட்டிற்கு வாருங்கள்” என்று பேசி ஆடியோ வெளியிட்டிருந்தார். இதனை ட்விட்டரில் பலரும் பகிர்ந்திருந்தனர்.

image

 

இந்நிலையில், ரஜினியின் ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினியின் ஆடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இதுதான் எங்கள் தலைவர். தலைவரின் ஆடியோவை கேட்கும்போது பாஸிட்டிவான எண்ணத்தையும் பாசத்தையும் ஊட்டுகிறது. இதனைக் கேட்ட அந்த ரசிகர் அதனை எப்படி உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். லவ் யூ தலைவா.  குருவே சரணம்” என்று பூரிப்போடு பதிவிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்