Published : 03,Jul 2017 03:16 PM
மீண்டும் ஜெஸ்ஸியான த்ரிஷா!

மலையாளத்தில் நிவின்பாலியுடன் த்ரிஷா நடிக்க உள்ள ’ஹேய் ஜுடே’ படம் பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. இந்தப்படம் அங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், கிருத்துவ பெண்ணாக நடிக்கிறார் த்ரிஷா. கெளதம் மேனன் வாசுதேவன் இயக்கத்தில் ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் கிருத்தவப்பெண்ணாக ஜெஸ்ஸி பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார் அவர். அதேபோல், இப்படத்திலும் த்ரிஷா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவார் எனக் கூறுகிறார் இப்படத்தின் இயக்குநர் ஷ்யாமபிரசாத்!