
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் முதல்வர் அறிக்கையையும் ஒருங்கிணைத்து உயர்கல்வித்துறை செயல்பட்டு வருவதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்
அரியருக்கு பணம் கட்டிய மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா என அரசு விளக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ பொன்முடி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ,
இறுதிப்பருவத் தேர்வுகளை தவிர பிற பருவத் தேர்வுக்காக கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளித்து மதிப்பெண் வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. எது நடக்குமோ அதை மட்டுமே கூறும் அரசு அதிமுக அரசு. இதில் எந்த உள்நோக்கமும் பாகுபாடும் இல்லாமல் மாணவர்கள் உயிர் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு அறிவித்த அறிவிப்பு இது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் முதல்வர் அறிக்கையையும் ஒருங்கிணைத்து உயர்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.
மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் எண்ணம் அரசிற்கு இல்லை.AICTE சேர்மன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு சொந்த மின்னஞ்சலில் இருந்து மெயில் அனுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் E-mail யில் இருந்து அனுப்பவில்லை.அதேபோல் அரசுக்கும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. எனவே இது குறித்து மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் AICTE, UGC வழிகாட்டுதல்படி அந்த தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.