இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - ட்ரம்ப்

இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - ட்ரம்ப்
இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - ட்ரம்ப்

இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற வார்த்தை இன்று உலக நாடுகளிடையே ஒலித்துக்கொண்டு இருக்கிறது. முதன்முதலாக கொரோனா
என்ற தொற்று பரவியதாகவும், இது வூகான் மாகாணத்தில் ஒருவருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் ஜனவரி மாதம் சீனா கூறியது. ஆனால் இன்று உலக நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளன. அதேவேளையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை சோதனை செய்து வருகின்றன. இந்நிலையில் இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.

பிலடெல்ஃபியாவில் பேசிய அதிபர் ட்ரம்ப், கொரோனா தடுப்பு மருந்தை நெருங்கிவிட்டதாக கூறினார். முந்தைய அரசாக இருந்தால் தடுப்பு மருந்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வர பல ஆண்டுகாலம் எடுத்திருக்கும். ஆனால், தன்னுடைய அரசு இன்னும் சில வாரங்களில் தடுப்பூசியை அறிமுகம் செய்ய உள்ளது என தெரிவித்தார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com