[X] Close

கர்நாடகாவின் இரு அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு

Karnataka-opens-water-from-dams

தமிழக விவசாயத்திற்காக கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தலா 2,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக இரு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே இரு அணைகளில் இருந்தும் 4 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துள்ளது. இதற்கிடையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதைக் கண்டித்து கர்நாடகா மாண்டியா மாவட்டத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பு ஆண்டில் தமிழகத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் திறந்து விட தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close