மும்பை தாக்குத‌லில் தப்பிய யூதச் சிறுவனை இஸ்ரேலில் சந்திக்கும் மோடி

மும்பை தாக்குத‌லில் தப்பிய யூதச் சிறுவனை இஸ்ரேலில் சந்திக்கும் மோடி
மும்பை தாக்குத‌லில் தப்பிய யூதச் சிறுவனை இஸ்ரேலில் சந்திக்கும் மோடி

இஸ்ரேலுக்கு பயணம் செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது உயிர்தப்பிய யூதச் சிறுவனைச் சந்திக்க இருக்கிறார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் 12 இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து மும்பையில் தங்கி தொண்டு நிறுவனத்தின் மூலம் சேவையாற்றி வந்த ரப்பி கேரியல் ஹோல்ட்ஸ்பெர்க், அவரது மனைவி ரிவ்கா ஆகியோரும் உயிரிழந்தனர். இந்தத் தம்பதியின் கைக்குழந்தையாக இருந்த மோஷே ஹோல்ட்ஸ்பெர்க்கை அவர்களது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சாண்ட்ரா என்ற இந்தியப் பெண் பயங்கரவாதிகளிட‌ம் இருந்து பாதுகாத்தார். அதன் பிறகு,  உயிரை பணயம் வைத்து சிறுவனை பாதுகாத்ததற்காக சாண்ட்ராவுக்கு இஸ்ரேலிய அரசு கவுரவுக் குடியுரிமை வழங்கியது. தற்போது 10 வயதான மோஷேவையும், அவருடன் தங்கியிருக்கும் சாண்ட்ராவையும் வரும் 5ம் தேதி பிரதமர் மோடி சந்திக்க இருக்கிறார். இது இரு நாட்டு உறவில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. 
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com