உப்பிலியபுரம் அருகே உள்ள சிறுநாவலூரில் குலதெய்வ வழிபாட்டின் போது தோரணவெடி வெடித்ததில் 7 வயது சிறுவன் பலி. போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை பரமத்தி வேலூர் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் பெரியார் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவர் ஹைதராபாத்தில் மத்திய ரிசர்வ் படையில் காவலராக வேலைபார்த்து வருகிறார். தற்போது விடுப்பில் வந்துள்ள இவர், தனது குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள சிறுநாவலூரில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளனர்.
அப்போது அங்கு தோரணவெடி வெடிக்கப்பட்டது. இதில் எதிர்பாராதவிதமாக வெடி ஒன்று சிதறி லோகநாதனின் மகன் சசிதரனின் மீது விழுந்து வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவனை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சசிதரன் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும் அப்பகுதியிலுள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் சொந்த ஊரான பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூருக்கு சிறுவனின் உடலை அடக்கம் செய்ய கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த முசிறி காவல்கண்காணிப்பாளர் பிரம்மானந்தன் தலைமையிலான போலீசார் பரமத்திவேலூர் போலீசார் உதவியுடன் பொத்தனூருக்கு சென்று சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் சிறுவனின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!