
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது.
இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள www.mcc.nic.in என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவு செய்யலாம். பதிவு செய்தல் மற்றும் கல்லூரிகள் தேர்வை வரும் 11ம் தேதி வரை மாணவர்கள் மேற்கொள்ளலாம் என்றும், 12ஆம் தேதி கல்லூரித் தேர்வை இறுதி செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13, 14ஆம் தேதிகளில் இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான பணிகள் நடைபெறும் என கலந்தாய்வை நடத்தும் பொது மருத்துவ சேவை இயக்ககம் தெரிவித்துள்ளது.