Published : 14,Sep 2020 12:32 PM

இரண்டாவது முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவித்த இஸ்ரேல்.!

Israel-to-impose-a-three-week-nationwide-lockdown

இரண்டாவது முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கை முதல் நாடாக அமல்படுத்தியுள்ளது இஸ்ரேல்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 24-வது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், அங்கு 1,119 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.

image

 

இதையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 வார காலத்துக்கு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இதன்மூலம் இரண்டாவது முறையாக நாடு தழுவிய ஊரங்கை அமல்படுத்தும் முதல் நாடாக இஸ்ரேல் உள்ளது.

இஸ்ரேலில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீட்டு வசதித் துறை அமைச்சா் யாகோவ் லிட்ஸ்மேன் ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்