Published : 14,Sep 2020 09:05 AM

வாடிக்கையாளர்களின் ஆதார் நகல்களை கடத்தல் கும்பலுக்கு விற்ற நபர்கள்: சென்னையில் அதிர்ச்சி.!

Individuals-arrested-for-selling-copies-of-customer-IDs-to-smuggling-gangs

செல்போன் கடைக்கு வருபவர்களின் ஆவணங்களை நகல் எடுத்து, சிம்கார்டுகளை வாங்கி கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்ததாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

image

சென்னை மண்ணடியைச் சேர்ந்த தொழில் அதிபர் திவான் அக்பரைக் கடத்திச் சென்று, 2 கோடி ஹவாலா பணத்தை கொள்ளையடித்ததாக, தவ்பீக், உமா மகேஸ்வரன், ஆல்பர்ட் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். திவான் அக்பரை கடத்திச் சென்ற போது , குற்றவாளிகள் பேசிய செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், ராயபுரத்தைச் சேர்ந்த மோனிஷா என்பவரின் பெயரில் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கே தெரியாமல் அவரின் ஆதார் நகலை பயன்படுத்தி பத்துக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கப்பட்டது தெரியவந்தது.


புதுவண்ணாரப்பேட்டையில் வசிக்கும் அர்ஜூன் என்பவர் மோனிஷா கொடுத்த ஆதார் அட்டையை நகல் எடுத்து, 10 சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். அதை ஒரு கும்பல் வாங்கி கடத்தல் காரர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இது தொடர்பாக, 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சிம்கார்டுகள் மூவாயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்