Published : 03,Jul 2017 08:03 AM
புதிய அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் பதவியேற்பு

மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதை அவர் மறுத்துவிட்டார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக புதிய அட்டர்னி ஜெனரலாக, 86 வயதாகும் மூத்த வழக்கறிஞரும், அரசியல் சட்ட வல்லுநருமான கே.கே.வேணுகோபாலை நியமிக்க குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த கே.கே.வேணுகோபால் டெல்லியில் இன்று புதிய அட்டர்னி ஜெனரலாக பதவி ஏற்றுக்கொண்டார்.