
ஏவுகணை சோதனைகளால் பதற்றத்தை ஏற்படுத்திவரும் வடகொரியாவுக்கு எதிராக, அதிக அழுத்தம் கொடுக்க அமெரிக்காவும், ஜப்பானும் முடிவு செய்துள்ளன.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளை விமர்சித்து வரும் தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது போர்தொடுப்போம் என வடகொரியா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வடகொரியாவுக்கு எதிராக சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதையடுத்து வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டின் மீது அதிக அழுத்தம் கொடுக்க அமெரிக்காவும், ஜப்பானும் முடிவு செய்துள்ளன.