Published : 12,Sep 2020 10:39 PM
ஜம்முனு தெருவில் ஸ்கேட்டிங் செய்த நாய்.. பார்த்து வியந்த மக்கள் - வைரல் வீடியோ

மனிதர்களைவிட நாய்கள் அருமையாக ஸ்கேட்டிங் செய்வதை நம்மில் எத்தனைபேர் பார்த்திருக்க முடியும்? இணையத்தில் வெளியான ஒரு வீடியோ பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரரான ரெக்ஸ் சேப்மன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு நாய் ஹீரோவைப்போல் தெருவில் ஸ்கேட்டிங் செய்கிறது. அந்த வீடியோவை பகிர்ந்து அதில், ’’ஸ்கேட்டர் குட் பாய்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Skater good boy... pic.twitter.com/eOgB7wMe0X
— Rex Chapman?? (@RexChapman) September 11, 2020
36 நொடிகள் வருகிற இந்த வீடியோ, முதலில் ஒரு நாய் ஸ்கேட்டிங் போர்டில் ஏறி, அங்கிருந்து செல்வதைக் காட்டுகிறது. மேலும் அந்த தெருவில் நடப்பவர்களும், சாலையோரத்தில் அமர்ந்திருப்பவர்களும் ஆச்சர்யத்துடன் பார்ப்பதும், வீடியோ எடுப்பதும் பதிவாகியுள்ளது.
Skater good boy... pic.twitter.com/eOgB7wMe0X
— Rex Chapman?? (@RexChapman) September 11, 2020
இந்த வீடியோவை பகிர்ந்ததிலிருந்து 5.76 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை விரும்பிய பலரும், ‘’நாய் காற்றில் பறப்பதை நான் ரசிக்கிறேன்’’, ‘’உண்மையைச் சொன்னால் என்னைவிட இந்த பப்பி கூலாக உள்ளது’’ என பலவிதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.