Published : 12,Sep 2020 10:00 PM

யுனிசெஃபின் குழந்தைகள் வன்முறை எதிர்ப்பு பிரச்சார குரலாக ஆயுஷ்மான் தேர்வு

UNICEF-s-new-celebrity-advocate-Ayushmann

பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் யுனிசெஃபுடன் இணைந்து உலகளவில் குழந்தை வன்முறை எதிர்ப்பு பிரச்சாரத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் பாலிவுட் நடிகரும், பாடகருமான ஆயுஷ்மான் குர்ரானா.

செப்டம்பர் 11ஆம் தேதி ஆயுஷ்மான் தனது இன்ஸ்டாகிராமில், இந்தியாவின் யுனிசெஃப் பிரதிநிதியான டாக்டர் யாஸ்மின் அலி ஹாக், குழந்தைகள் வன்முறை எதிர்ப்பு பிரச்சார குரலாக ஆயுஷ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளதை வரவேற்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘’ஆயுஷ்மான் உணர்திறன்மிக்க, ஆர்வமிக்க மற்றும் ஒவ்வொரு குழந்தைக்கும் எதிரான வன்முறையை தடுக்கும் சக்திவாய்ந்த குரலாக இருப்பார். இந்த முக்கிய பிரச்னையில் ஆயுஷ்மான் விழிப்புணர்வை ஏற்படுத்துவார். குறிப்பாக கொரோனா பொதுமுடக்கம் காரணமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதை எதிர்த்து குரல்கொடுப்பார்’’ என பேசியுள்ளார்.

image

இந்த அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டது பற்றி ஆயுஷ்மான் பேசுகையில், ‘’அனைவருக்கும் வாழ்க்கையில் நல்ல தொடக்கம் அமையவேண்டும். என் குழந்தைகள் வீட்டில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் விளையாடுவதைப் பார்க்கும்போது, பாதுகாப்பில்லாமல் வளரும் குழந்தைகளைப் பற்றி யோசிப்பேன். வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் வன்முறைகளை சந்திக்கும் குழந்தைகளைப் பற்றி யோசிப்பேன்’’ எனக் கூறியுள்ளார்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்