Published : 11,Sep 2020 02:29 PM
It's a boy.. பார்த்ததும் ரசிக்க வைக்கும் வைரல் வீடியோ..!

பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என வெளிப்படுத்துவதை பலரும் சோஷியல் மீடியாக்களில் அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி அசத்துவர். அந்தவகையில், துபாயைச் சேர்ந்த வசதி படைத்த தம்பதியரான அனாஸ் மற்றும் அஸா மார்வா தங்களது இரண்டாவது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்த புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் வீடியோ ஒன்றை ஒளிபரப்பினர். அனைவரும் சுற்றி நின்று பார்த்து ஆச்சர்யப்படும் அந்த வீடியோவை அனாஸ் மார்வா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தம்பதியர் தங்களது முதல் பெண் குழந்தையை கையில் பிடித்துள்ளனர். அவர்களைச் சுற்றி குடும்பத்தாரும், ஏராளமான நண்பர்களும் எதிர்பார்ப்புடன் நிற்கின்றனர். திடீரென புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் வண்ணமயமான வீடியோ ஒன்று ஒளிப்பரப்பாகி இறுதியில், ஆண்குழந்தை என அறிவிக்கிறது.
View this post on InstagramA post shared by Anas Marwah | انس مروة (@anasmarwah) on
இந்த வீடியோவை வெளியிட்டதிலிருந்து 1.7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 5.7 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். மேலும், பலர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.