Published : 10,Sep 2020 05:16 PM
மாணவர்கள் எதையும் எதிர்கொள்ளும் விடாமுயற்சியை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ்

மாணவர்கள் எதையும் எதிர்கொள்ளும் தன்மையையும் விடா முயற்சியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “அரியலூர் - இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் நேற்று மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். மாணவர் விக்னேஷ் அவர்களின் பிரிவால் மிகுந்த துயருற்றருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெற்றோர்கள் குழந்தைகளை தனிமையில் விடாமல் அவர்களின் விருப்பங்கள் அறிந்து உரிய அறிவுரைகள் வழங்கி அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ளுமாறும், மாணவர்கள் துணிவுடன் எதையும் எதிர்கொள்ளும் தன்மையையும் விடா முயற்சியையும் வளர்த்துக் கொள்ளவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். https://t.co/DD5SYax7St
— O Panneerselvam (@OfficeOfOPS) September 10, 2020
பெற்றோர்கள் குழந்தைகளை தனிமையில் விடாமல் அவர்களின் விருப்பங்கள் அறிந்து உரிய அறிவுரைகள் வழங்கி அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ளுமாறும், மாணவர்கள் துணிவுடன் எதையும் எதிர்கொள்ளும் தன்மையையும் விடா முயற்சியையும் வளர்த்துக் கொள்ளவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.