தமிழக சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார் துரைமுருகன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக, க.பொன்முடி, ஆ.ராசா ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “இன்னும் 8 மாதங்களில் திமுக ஆளும் கட்சியாக மாறும். துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆனதையும், டி.ஆர்.பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி அடைவார். துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளார். 9 முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்” என்றார். ஸ்டாலின் தன்னை புகழ்ந்து பேசியதை கேட்டு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கண்ணீர் விட்டார்.
அதனையடுத்து டி.ஆர்.பாலு குறித்து ஸ்டாலின் பேசுகையில், ‘வெட்டி வா என்றால் கட்டி வரக் கூடிய தம்பிகளில் ஒருவர்’ என கருணாநிதியால் பாராட்டப்பெற்றவர் பாலு. கருணாநிதிக்கு சாரதியாக இருந்து சிறை சென்றவர் டி.ஆர்.பாலு. மிசா காலத்தின் போது கைதாகி எங்களுடன் சிறையில் இருந்தவர். கருணாநிதிக்கு ஒன்று என்றால் உயிரையும் கொடுக்க கூடியவர் பாலு. நெருக்கடி நிலையின்போது கருணாநிதிக்கு கார் ஓட்டியவர்” என்றார்.
Loading More post
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?