Published : 02,Jul 2017 04:23 PM

நள்ளிரவில் பிறந்த "ஜிஎஸ்டி" பாப்பா

Meet--GST---Mother-names-child-after-Indias-biggest-tax-reform

ஜிஎஸ்டி அமலான நேரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு " ஜிஎஸ்டி" என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நள்ளிரவில் ஜிஎஸ்டி அமலான நேரத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்த பெற்றோர், வரலாற்று சிறப்பு மிக்க ஜிஎஸ்டி அமலான நேரத்தில் தமது குழந்தையும் பிறந்ததால் " ஜிஎஸ்டி" என்றே பெயர் வைத்துள்ளனர்.

குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைக்கப்பட்டுள்ள தகவல் அறிந்ததும் அம்மாநில முதலமைச்சரான வசுந்தர ராஜே, ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ ஜிஎஸ்டி-க்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்