ஓணம் பண்டிகையையொட்டி கேரள அரசு மக்களுக்கு இலவசமாக வெல்லத்தை அளித்ததுபோல், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசும் மக்களுக்கு சீனிக்கு பதிலாக வெல்லத்தை அளிக்க வேண்டும் என வெல்ல உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் லட்சுமிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெல்ல உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உற்பத்தி செய்யும் வெல்லமானது கேரளா,விருதுநகர், மற்றும் மதுரை உள்ளிட்டப் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கேரள பண்டிகைகளின்போது அதிகப்படியாக ஏற்றுமதியாகும் இந்த வெல்லமானாது, இந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பாதியாகக் குறைந்தது. இதானல் வெல்லத்தின் விலையும் கடுமையாக குறைந்தது. இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கேரள அரசு உற்பத்தியாளர்களிடம் இருந்து வெல்லங்களை பெற்று மக்களுக்கு இலவசமாக வழங்கியது. இதனால் வெல்லத்தின் விலை மீண்டும் அதிகரித்தது.
இதனையடுத்து மீண்டும் வெல்ல ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில் தற்போது அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. இதனால் கேரள அரசு மக்களுக்கு இலவசமாக வெல்லத்தை வழங்கியதுபோல், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசும் மக்களுக்கு சீனிக்குப் பதிலாக வெல்லத்தை அளிக்க வேண்டும் என வெல்ல உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?