Published : 08,Sep 2020 09:20 PM
9-12ம் மாணவர்கள் ஆசிரியர்களிடம் நேரடியாக ஆலோசனைகள் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் படிப்பு தொடர்பாக நேரடியாகஆசிரியர்களின் வழிகாட்டுதல் பெற பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் எனவும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகளை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அப்போது செப்டம்பர் 21 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவீத ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம் என அறிவித்தது. மேலும், செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களின் நேரடியான வழிகாட்டுதல் பெற பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம், ஆனால் கட்டாயமல்ல என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், “செப்டம்பர் 21 முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்க்ள் சுய விருப்பத்தின்படி தங்கள் பள்ளி ஆசிரியர்களிடம் ஆலோச படிப்பிற்கான னை பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,
- ”குறைந்த பட்சம் 6 அடி தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
- முகக்கவசம் அணிவது கட்டாயம்
- அடிக்கடி 40- 60 நொடிகள் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்
- சானிடைசரை பயன்படுத்தி 20 நொடிகள் கைகளை கழுவலாம்
- இருமல் வரும்போது கைகளில் பேப்பரை கொண்டோ, கைக்குட்டையை கொண்டோ, கைகளின் எல்போவை கொண்டோ வாய் மற்றும் மூக்கை கவர் செய்ய வேண்டும்
- ஒவ்வொருவரும் தனது ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும்
- ஏதேனும் உடல் தொந்தரவுகள் இருந்தால் உடனே புகார் அளிக்க வேண்டும்
- பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது.
- ஆரோக்கிய சேது அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#IndiaFightsCorona
— Ministry of Health (@MoHFW_INDIA) September 8, 2020
Health Ministry issues SOP for partial reopening of Schools for students of 9th-12th classes on a voluntary basis, for taking
guidance from their teachers in the context of #COVID19.https://t.co/i1I8pPwXyTpic.twitter.com/6c9datyVOC