Published : 02,Jul 2017 10:54 AM
ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வற்புறுத்த மாட்டோம்: செங்கோட்டையன்

ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளை தேடிவரும் சூழல் ஏற்படும் என தமிழக பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ஆசிரியரின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்குமாறு தமிழக அரசு வற்புறுத்தாது. கல்வியில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களால் அரசுப்பள்ளிகளை அவர்களாகவே தேடி வரும் சூழல் ஏற்படும். நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்பதில் அரசு உறுதியுடன் உள்ளது என அவர் தெரிவித்தார்.