கொரோனா பொதுமுடக்கத்தால் மாவட்டங்களுக்கிடையில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளி மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகள் இன்று காலை 5.30 மணி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தனி மனித இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணிவதும் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் இருந்து வெளிமாவட்டத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இன்று மட்டும் 400 பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஊர்களுக்கு செல்ல குறைந்த அளவு பயணிகள் மட்டுமே வருவதால் 50 சதவீதம் இருக்கைகள் நிரம்பும் வரை காத்திருந்து பின்னரே பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக பல மாதங்களுக்கு பிறகு தொலைதூர பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கி அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், கவனமாக பேருந்து இயக்குவது குறித்து பல முன்னெச்சரிக்கை குறிப்புகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, 5 மாதங்களாக இரவு நேரத்தில் ஓய்வில் இருந்ததால், இரவு நேரங்களில் கூடுதல் விழிப்புணர்வோடு பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?