ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியை மும்பை அணியுடன் தொடங்கும் சென்னை அணி கடைசி போட்டியை பஞ்சாப் அணியுடன் நிறைவு செய்கிறது.
ஐபிஎல் தொடரின் போட்டிகள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அபுதாபியில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 வீரர்கள் உட்பட 13 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் சென்னை சூப்பர் அணியின் போட்டிகள் தள்ளிப்போகலாம் என்றும், அதனால் தான் அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் வெளியாகியிருக்கும் அட்டவணையில் சென்னை அணி விளையாடும் போட்டிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளை காணலாம்.
போட்டி எண் தேதி எந்த அணிக்கு எதிரே
1 செப்.19 சென்னை - மும்பை
4 செப்.22 சென்னை - ராஜஸ்தான்
7 செப்.25 சென்னை - டெல்லி
8 அக்.2 சென்னை - ஹைதராபாத்
16 அக்.4 சென்னை - பஞ்சாப்
19 அக்.7 சென்னை - கொல்கத்தா
22 அக்.10 சென்னை - பெங்களூர்
25 அக்.13 சென்னை - ஹைதராபாத்
29 அக்.17 சென்னை - டெல்லி
31 அக்.19 சென்னை - ராஜஸ்தான்
35 அக்.23 சென்னை - மும்பை
37 அக்.25 சென்னை - பெங்களூர்
41 அக்.29 சென்னை - கொல்கத்தா
44 நவ.1 சென்னை - பஞ்சாப்
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix