போலீசார் தாக்கியதாக வீடியோ வெளியிட்ட இளம்பெண்.. ஆனால், உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
கிழக்கு டெல்லியின் கிருஷ்ணா நகரில் உள்ள பூங்கா ஒன்றில், தன்னையும் தனது ஆண் நண்பரையும் போலீசார் உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து தாக்கியதாக, 18 வயதான இளம்பெண் ஒருவர் வீடியோவில் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவந்த நிலையில் சம்பந்தப்பட்ட போலீசார் அந்த இளம்பெண்ணின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
அந்த பெண்ணின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், அவர் பொய் சொல்வதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. துணை போலீஸ் கமிஷனர் அமித் ஷர்மா நடந்தது என்ன என்பது குறித்து கூறியதாவது:
''இளம்பெண் கூறிய இடத்தில் காவலர் சஞ்சய் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையில், போலாநாத் நகரில் வசிக்கும் நிதின் ஜெயின் என்பவர் பூங்காவில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அதே பூங்காவில் 19 வயதான டிவிட் மற்றும் அவரது பெண் நண்பரும் ஜோடியாக வாக்கிங் சென்றுள்ளனர். இவர்கள் மீது ஜெயின் தெரியாமல் மோதியதால் அவரை தாக்கத் தொடங்கியுள்ளனர்.
ரோந்து பணியிலிருந்த சஞ்சய் பூங்காவிற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு இருவரும் சேர்ந்து ஜெயின் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டுள்ளார். அவர்களை விலக்கிவிடச் சென்ற காவலர் சஞ்சயையும் திட்டி தள்ளிவிட்டுள்ளனர்.
இந்த ஜோடியினரை கண்ட்ரோல் செய்ய முடியாதல் சஞ்சய் தலைமை கான்ஸ்டபிள் நரேந்திரரை அந்த இடத்திற்கு அழைத்துள்ளார்.
நடந்தது இதுவாக இருக்க, போலீசார் தாக்கியதால அந்த பெண் பொய் சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார்’’ என்றார்.
இதையடுத்து டிவிட்டின் தந்தை நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு இந்த இந்த விவகாரத்தை முடித்து வைத்தார். ஜெயினும் எந்த புகாரும் கொடுக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி