நண்பன் காதலியோடு சென்றுவிட்டதால், போலீஸார் தன்னையும் விசாரிப்பார்கள் என பயந்த மாணவர் ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகன் கார்த்திகேயன். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ ஆட்டோ மெக்கானிக்கல் இரண்டாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பர் ஒருவர் அவரது காதலியுடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் காதலியின் நண்பரான தன்னையும் போலீஸார் விசாரிக்கக் கூடும் என அச்சமடைந்த கார்த்திகேயன் பூலாம்பாடி பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் காவல்துறைனர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை மீட்டபோது கார்த்திகேயன் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட கார்த்திகேயனுக்கு மூன்று சகோதரிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்