Published : 04,Sep 2020 01:08 PM
சத்துணவு மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை - தமிழக அரசு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு மாணவர்களுக்கு 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டன. அண்மையில் தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் படி 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைத் தந்து ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு மாணவர்களுக்கு 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே வழங்கப்படும் உலர் உணவுப்பொருட்களுடன் முட்டையையும் சேர்த்து வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.