Published : 04,Sep 2020 01:01 PM

சலூனில் அனுமதிக்கப்படாத பட்டியலின மக்கள்... நவீன காலத்திலும் தொடரும் கேரளத் துயரம்

Denied-access-to-barbershops-due-to-caste--in-Kerala-village

(கோப்புப் படம்)

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த 270 குடும்பங்களுக்கு சாதிய ஒடுக்குமுறை காரணமாக அங்குள்ள முடி திருத்தங்களில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நவீன காலத்திலும் தீண்டாமை தொடர்கிறதா என்ற கவலையை அந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தி நியூஸ் மினிட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டவாடா பஞ்சாயத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் இதுபற்றி உள்ளூர் பஞ்சாயத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்கள். தற்போது இந்த மக்கள் முடிதிருத்தம் மற்றும் ஷேவிங் செய்வதற்காக மூணாறில் இருந்து 42 கி. மீ. மற்றும் எலப்பட்டியில் இருந்து 12 கி. மீ தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

image

(கோப்புப் படம்)

இந்தப் பட்டியலின சமூகத்தினர் கோட்டாகம்பூர், வட்டவாடா மற்றும் கோவிலூர் ஆகிய கிராமங்களில் வசித்து வருகின்றனர். இங்குள்ள எட்டு கிராமங்களில் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களின் கட்டுப்பாடுகள் அதிகம். நான்கைந்து கிராமங்களில் மட்டும் பழங்குடியினரும் பட்டியலின மக்களும் வாழ்ந்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாலன், "எங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் முடிவெட்டிக் கொள்கிறோம். ஏனெனில் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் எங்களை சலூன்களுக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. வீட்டு வளாகத்திற்குள் செல்வதற்கும் அனுமதிப்பதில்லை. இந்தக் கட்டுப்பாடுகள் என் தந்தை ராமனின் சிறுபிராயத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு வயது 76 " என்கிறார்.

image

(கோப்புப் படம்)

இதனிடையே, "வட்டவாடா பஞ்சாயத்தில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது முடிதிருத்தகம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. முடிதிருத்தகம் செயல்படுவதற்கான செலவுகளை ஊராட்சியே ஏற்றுக்கொள்ளும்" என்று கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ராமராஜூ தெரிவித்துள்ளார்.

இடுக்கி மாவட்டத்தில் இந்த ஒடுக்குமுறை பல தலைமுறைகளாக தொடர்ந்தாலும், அதையொரு புகாராக பட்டியலின மக்கள் தெரிவிக்காமல் இருந்துள்ளார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்