Published : 01,Jul 2017 04:37 PM

ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகளிடம் ஆதரவு கோரினார் ராம்நாத் கோவிந்த்!

Ram-Nath-Kovind-Meets-OPS-and-EPS

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார். அவர் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை ராம்நாத் கோவிந்த் சந்தித்தார். அப்போது தாம் குடியரசுத் தலைவரானால் கட்சி பேதமின்றி செயல்படுவேன் என்றும் புதிய இந்தியாவை கட்டமைக்க பாடுபடுவேன் என்றும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். ராம்நாத் கோவிந்த் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ராம்நாத் கோவிந்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளதாக கூறினார்.

பின்னர் ராம்நாத் கோவிந்த், சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை‌யும் சந்தித்து ஆதரவு கோரினார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற‌ நிகழ்ச்சியில், முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக அம்மா அணி‌ எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா‌ மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் மேடைக்கு வந்த ராம்நாத் கோவிந்த், அதிமுக அம்மா அணி‌ எம்.எல்.ஏக்கள் மற்றும்
எம்.பிக்களிடம் ஆதரவு திரட்டினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்