[X] Close

ஜூலை 10ல் இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல்: கங்குலி

Indian-cricket-team-coach-to-be-selected-on-July-10--Sourav-Ganguly

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வுக்கான நேர்காணல் மும்பையில் வரும் 10ம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 


Advertisement

லண்டனில் நடைபெறும் எம்சிசி கூட்டத்துக்கு செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி இந்த தகவலைத் தெரிவித்தார். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 9ல் முடிவடையும் நிலையில், அதற்கடுத்த நாள் நேர்காணலை நடத்த சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ். லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு முடிவு செய்துள்ளது. பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி, விரேந்திர சேவாக், ரவி சாஸ்திரி மற்றும் வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும், பயிற்சியாளர் பதவிக்கான ரேஸில் ரவி சாஸ்திரியே முந்தி நிற்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  


Advertisement

Advertisement
[X] Close