[X] Close

பிரசவவலியால் துடித்த கர்ப்பிணி... 5 கி.மீ தூரம் கட்டிலில் தூக்கிச்சென்ற மக்கள் !!

இந்தியா

Pregnant-Woman-Carried-To-Hospital-On-Cot-For-5-kms-In-Chhattisgarh

சத்தீஸ்கரில் உள்ள ஜஷ்பூர் கிராமத்தில் சரியான சாலைவசதி இல்லாததால் பிரசவவலியால் துடித்த கர்ப்பிணியை 5 கி.மீ தூரம் கட்டிலில் தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

image

சத்தீஸ்கர் மாநிலத்தின்  ஜஷ்பூரின் அருகேயுள்ள ஜப்லா கிராமத்தைச் சேர்ந்த பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை, சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டிலில் சுமந்து சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர்.


Advertisement

பிரதான சாலையிலிருந்து இந்த கிராமத்திற்கு செல்லும் உள்ளூர் பாதையில் இரண்டு வடிகால்கள் உள்ளது. இந்த இரண்டு வடிகால்களிலும் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாது. இதனால் மருத்துவனைக்கு செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த சூழலில்தான் இக்கர்ப்பிணி பெண்ணை 5 கிமீ தூரம் சிரமப்பட்டு கட்டிலில் தூக்கிவந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

"கடந்த காலத்திலும் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்தன, நாங்கள் அதைப் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளோம். இந்த மழைக்காலத்தின் முடிவில் இந்த வடிகால்களின் பாலத்தின் கட்டுமானம் தொடங்கும், இந்த ஆண்டு இறுதிக்குள் இது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று பகிச்சா ஜன்பாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் சிங்.

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close