Published : 02,Sep 2020 03:50 PM

”ஆன்லைன் வகுப்பு புரியவில்லை” 11ம் வகுப்பு மாணவர் தற்கொலை - ஆண்டிபட்டியில் சோகம்

11-standard-student-commit-suicide-due-to-cant-understand-online-classes

ஆண்டிபட்டி அருகே 11ம் வகுப்பு மாணவன் ஆன்லைன் வகுப்பு புரியாத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் விக்கிரபாண்டி (16). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான கரட்டுப்பட்டியிலிருந்து ஆன்லைன் வகுப்பு படித்து வந்தார்.

ஆன்லைன் வகுப்பு ஆரம்பம்: லேப்டாப்களுக்கு தட்டுப்பாடு| Dinamalar

இந்நிலையில் மாணவன் விக்கிரபாண்டி அவரது அப்பா இளங்கோவனிடம் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கு இளங்கோவன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன முடைந்து காணப்பட்ட மாணவன் இன்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

பின்னர் அவரது பெற்றோர்கள் மாணவனை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு மாணவன் விக்கிரபாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இதே போல ஆன்லைன் வகுப்பு புரியாததால் ஒரு மாணவன் உயிரிழந்த நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் 2-ஆவது சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்