[X] Close

பாகிஸ்தான் சிறையில் துன்பப்படும் 546 இந்தியர்கள்

546-Indian-nationals-in-Pakistan-jails

பாகிஸ்தான் சிறைகளில் 546 இந்தியர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கையெழுத்தான தூதரக அணுகல் ஒப்பந்தப்படி பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் குறித்த விவரத்தை  இந்திய தூதரகத்திடம் கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் சிறைகளில் மொத்தமாக 546 இந்தியர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 494 பேர் மீனவர்கள். 52 பேர் பொதுமக்கள் ஆவர்.

கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் கொடுத்த தகவலின்படி, அந்நாட்டில் 351 இந்தியர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 54 பேர் பொதுமக்கள் மற்றும் 297 பேர் மீனவர்கள். ஆனால் ஜனவரி 6-ஆம் தேதி 219 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. மேலும் வரும் ஜூலை 10-ஆம் தேதி 77 இந்திய மீனவர்களை விடுதலை செய்யவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close